» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!

திங்கள் 3, ஜனவரி 2022 3:48:39 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,  இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.  நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் முதல் 15-18 வயது உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை துவக்கி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 15-18 வயது உள்ள மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 335 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 15-18 வயது உள்ள 81,000 மாணவர்கள் பயில்கிறார்கள். இம்மாணவ, மாணவியர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட உள்ளது. இந்தப் பணியை தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரத் துறையும் கல்வித் துறையும் இணைந்து அந்தந்த பள்ளி வளாகத்திலேயே மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில் 15-18 வயது உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 

18 வயதுக்கு மேல் உள்ள சுமார் 18 லட்சம் பொதுமக்கள் உள்ளனர். இதில் சுமார் 13 லட்சம் நபர்கள் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி உள்ளார்கள். 7.85 லட்சம் நபர்கள் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் செலுத்தி உள்ளார்கள். எனவே பள்ளி மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் இந்த கொரோனா தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மாணவ, மாணவியர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,  சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி செயலர் முரளிகணேஷ், தலைமை ஆசிரியர் சாந்தினி ஹசல் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.இதுபோல் தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல் நிலைப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளிலும் 15-18 வயது உள்ள மாணவ, மாணவியருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thoothukudi Business Directory