» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனாவால் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50ஆயிரம் நிதியுதவி வழங்கல்!

வியாழன் 9, டிசம்பர் 2021 10:10:47 AM (IST)

தூத்துக்குடியில் கரோனா தொற்றினால் இறந்த நபர்களின் வாரிசுதாரர்கள் 10 நபர்களுக்கு நிவாரண நிதி அனுமதிக்கப்பட்டதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தமிழகத்தில் கரோனா தொற்றினால் இறந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.50,000/-ம் வழங்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 394 நபர்கள் கொரோனா தொற்றினால் இறந்துள்ளர்கள். 224 நபர்களின் வாரிசுதாரர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள இணையதளத்தில் நிவாரணம் வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர். அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக 207 நபர்களுக்கு தலா ரூ.50,000/-ம் அனுமதிக்கப்பட்டு மனுதாரர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

truthDec 9, 2021 - 11:19:59 AM | Posted IP 173.2*****

only 374 people died - must be much higher

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory