» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாஞ்சோலை வந்த குமரி சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்: வனத்துறை அதிரடி நடவடிக்கை

சனி 25, செப்டம்பர் 2021 10:10:31 AM (IST)

மாஞ்சோலைக்கு சுற்றுலா சென்று விட்டு மாலை 6 மணிக்கு பிறகு  திரும்பி வந்த கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் 6 பேருக்கு வனத்துறையினர் ரூபாய் 6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட மாஞ்சோலைக்கு சுற்றுலா சென்று வந்த கன்னியாகுமரி மாவட்ட  சுற்றுலாப் பயணிகள் மாலை 6 மணிக்குப்பிறகு தாமதமாக மணிமுத்தாறு வன சோதனை சாவடியை வந்தடைந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு துணை இயக்குநர் மற்றும் வன உயரினக்காப்பாளர் அவர்களால் நபர் ஒன்றுக்கு ரூ.1000ம் வீதம் 6 நபர்களுக்கு ரூ.6000ம் இணக்க கட்டணமாக விதிக்கப்பட்டது. 

இனிவரும் காலங்களில் மாஞ்சோலைக்கு சென்று வரும் சுற்றுலாப்பயணிகள் மாலை 6 மணிக்குப்பிறகு மணிமுத்தாறு வன சோதனை சாவடிக்கு தாமதமாக வந்தடைந்தால் நபர் ஒன்றுக்கு ரூ.500 மற்றும் ரூ.1000ம் இணக்க கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் மாஞ்சோலை செல்லும் சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வந்து வனத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory