» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மையான தூத்துக்குடி திட்டம்: அமைச்சர் ஆய்வு!

திங்கள் 20, செப்டம்பர் 2021 4:15:47 PM (IST)



தூய்மையான தூத்துக்குடி திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகளை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தூர்வாறும் பணிகளை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு இன்று (20.09.2021) ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் பெ.கீதாஜீவன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, இன்றைய தினம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள கால்வாயில் மண் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் துப்புரவு பணியாளர்களின் மூலம் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வார காலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்காக சுமார் 700 துப்புரவு பணியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். கழிவு நீர் கால்வாய் மட்டுமல்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கற்கள் அனைத்து பகுதிகளிலும் துப்புரவு செய்யப்படும். 

ஆகஸ்ட் மாதத்தில் மழை வருகின்றதை கணக்கில் எடுத்துக்கொண்டு ஏற்கனவே எங்கெல்லாம் தெருக்களில் மண் அடைப்பு உள்ளதோ அப்பகுதியில் மண் அடைப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இன்றைக்கு தொடங்கி வைத்துள்ளோம் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. நகரத்தில் உள்ள அனைத்து கால்வாய்களையும் சுத்தம் செய்யப்படும். மழை காலங்களில் தெருவோர சாலைகளில் தங்கும் மழை தண்ணீரை தெருக்களில் தேங்கவிடாமல் அதனை மாநகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. டிரான்ஸ்பார்மர் ஒதுக்கப்பட்ட இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. 

மழை காலம் தொடங்குவதற்குள் தற்காலிகமாக டிரான்ஸ்பார்மர் அமைக்கவும் பணி நடைபெற்ற வருகிறது. கடந்த மழை காலங்களின்போது 25 பகுதிகள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டு தற்காலிகமாக அப்பகுதிகளில் தண்ணீரை தேங்கவிடாமல் செய்வதற்காக சம்ப் மற்றும் மோட்டர், பூமியில் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அதிக மழை பெய்யும் பொழுது தண்ணீர் தேங்காமல் சம்ப் மற்றும் மோட்டர் மூலம் குழாயின் வழியாக வெளியேற்றும் பணியும், மழைக்கு முன்னால் நடைபெற்று வரும் ஒப்பந்த பணியையும் முடிப்பதற்கும் வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மழை காலத்தில் வேலை எதுவும் செய்ய முடியாது. வருகின்ற மழை காலத்தில் மாநகராட்சி பகுதிகளில் மக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்க திட்டமிட்டு தயாராக இருக்கிறது. மழை நீர் அனைத்தையும் வெளியேற்றுவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. சீர்மிகு நகர திட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளும் மழை காலத்திற்குள் முடிப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு.வித்யா, மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ், உதவி பொறியாளர் சரவணன், முக்கிய பிரமுகர் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

தூத்துக்குடி ஏரியாSep 20, 2021 - 05:11:45 PM | Posted IP 162.1*****

முதலில் அமைத்த பாதாள சாக்கடையை அடைத்து விடுங்கள் அங்கு இருந்து தான் நீர் ஊருக்குள்ளே புகுந்து விடுகிறது ...அதை அடைக்காமல் இருந்தால் இனி தண்ணீர் வெளியேறுவது கடினம், ஊறிக் கொண்டே இருக்கும்...

மக்கள்Sep 20, 2021 - 05:06:37 PM | Posted IP 108.1*****

குடிநீர் நிறம் மாறி மாறி வருதே , சாக்கடை கலந்து வருதே கொஞ்சம் கவனியுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory