» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆள்மாறாட்டம் மூலம் மோசடி: ரூ.36 லட்சம் மதிப்புள்ள நிலம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு!

புதன் 15, செப்டம்பர் 2021 4:32:50 PM (IST)



விளாத்திகுளம் பகுதியில் ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு, உரிமையாளரிடம் ஆவணங்களை எஸ்பி ஜெயக்குமார் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, கெச்சிலாபுரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் சுடலைமணி (47) என்பவருடைய பெரியப்பாவான கருப்பண்ணன் என்பவருக்கு விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் வடக்கு கிராம பகுதியில் 6 ஏக்கர் புன்செய் நிலம் பாத்தியப்பட்டது. கடந்த 40 வருடங்களுக்கு முன்பு கருப்பண்ணன் இறந்து விட்டார். அவரது மனைவியும் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் கருப்பண்ணனின் ஒரே மகனும் திருமணம் ஆகாமலே இறந்துவிட்டார். 

இதனால் வாரிசு அடிப்படையில் கருப்பண்ணனின் தம்பி மகனான சுடலைமணி மேற்படி சொத்துக்களை அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா செய்துங்கநல்லூர் கிராமம் சந்தையடியூரைச் சேர்ந்த செல்லையா மகன் மாரிச்செல்வம் என்பவர் கருப்பண்ணன் உயிரோடு இருப்பது போன்று கருப்பண்ணன் என்ற பெயரில் போலி அடையாள அட்டை தயார் செய்து, அதனை உண்மைபோன்று பயன்படுத்தி மேற்படி நிலத்தை கருப்பண்ணன் பொது அதிகாரம் (General Power) எழுதிக் கொடுப்பது போல 22.03.2021 அன்று கங்கைகொண்டான் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலியாக பொது அதிகாரம் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மேற்படி சுடலைமணி என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தருமாறு கடந்த 26.08.2021 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயராம் அவர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன் பேரில் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி விசாரணை மேற்கொண்டு போலியாக பதிவு செய்யப்பட்ட 6 ஏக்கர் நிலத்திற்கான போலி ஆவணங்களை ரத்து செய்து மேற்படி நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள மேற்படி 6 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மனுதாரர் சுடலைமணியிடம் ஒப்படைத்தார்.மேலும் இவ்வழக்கில் விவேகமாக செயல்பட்டு 6 ஏக்கர் நிலத்தை மீட்டுக்கொடுத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory