» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை : மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடியது
வியாழன் 8, ஏப்ரல் 2021 4:37:46 PM (IST)
தூத்துக்குடியில் மீன்பாடு குறைந்ததால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15–ம் தேதி முதல் ஜூன் மாதம் 14–ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் தடைக்காலம் வருகிற 15ம் தேதி துவங்க உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 412 விசைப்படகுகள் கடலுக்கு சென்று வருகின்றன. இதனை நம்பி ஆயிரக்கணக்கான மீனவர்கள் உள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடியில் கடந்த 1ம் தேதி புனித வெள்ளி முதல் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. தற்போது மீன்பாடு குறைவாக உள்ளது. மேலும், மீன்பிடி தடைகாலம் விரைவில் துவங்க உள்ளது. இதனால் கடலுக்கு செல்ல வேண்டாம் என விசைப்படகு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாததால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ல் இறைச்சி கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:45:46 PM (IST)

முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:38:38 PM (IST)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:28:04 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் : பேராசிரியை பாத்திமா பாபு
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:22:16 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : ரஜினிகாந்த் பதில்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:08:12 PM (IST)

தூத்துக்குடியில் பயிற்சி மையத்தை மூட மாணவிகள் எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 4:19:56 PM (IST)
