» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வியாழன் 8, ஏப்ரல் 2021 8:20:50 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள மேல அரசடி பகுதியில் தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி பொன்னரசு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த லாரிகளில் சுமார் 10 டன் ரேஷன் அரிசியை கடத்தி கொண்டு செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த லாரியின் டிரைவர் மார்த்தாண்டத்தை சேர்ந்த அனீஸ் என்பவரிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் மேல அரசடி பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு சுமார் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் லாரி மற்றும் உங்கள் ஊரில் இருந்த 20 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ரேஷன் அரிசி மற்றும் இரண்டு லாரிகளையும் ஒப்படைத்தனர். தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Thalir ProductsBlack Forest CakesThoothukudi Business Directory