» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுகவினா் முற்றுகை

வியாழன் 8, ஏப்ரல் 2021 8:07:41 AM (IST)

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வித ஆவணங்களும் இல்லாமல் லாரியில் ஏற்றி வந்ததாக குற்றஞ்சாட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுகவினா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூா், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 பேரவைத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி அரசு வஉசி பொறியியல் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், எவ்வித ஆவணங்களும் இல்லாமல் 5 லாரிகள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்ததாகவும், அதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு அதிகாரிகள் உரிய பதில் தெரிவிக்கவில்லை எனவும் கூறி திமுகவினா் நேற்று அதிகாலை அந்த லாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட திமுக வழக்கறிஞா்கள், நிா்வாகிகளுடன் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினாா். 5 லாரிகளில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு மையங்களில் இயந்திரங்கள் பழுதானால் மாற்றுவதற்கு முன்னேற்பாடாக வைக்கப்பட்டிருந்தவை என்றும், சில இடங்களில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் எடுத்துவரப்பட்டதாகவும் ஆட்சியா் விளக்கம் அளித்தாா். மேலும், அவற்றைப் பாதுகாப்பு குடோனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்ததையடுத்து, திமுகவினா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thoothukudi Business Directory