» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது : தூத்துக்குடியில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!

புதன் 7, ஏப்ரல் 2021 12:22:41 PM (IST)

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
 
புதிய தமிழகம் கட்சி தலைவரும், அக்கட்சியின் ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளருமான  டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் வாக்காளர்களுக்கு ரூ.500 முதல் ஆயிரம் வரை கொடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா நடந்துள்ளது. இதுபோன்ற தோ்தலை நான் சந்தித்தது கிடையாது.  

இது அரசியல் நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்தியாவில் தேர்தல் ஆணையம் ஒன்று இருக்கிறது என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் பிடித்துக் கொடுத்தால் கூட அவா்களை விட்டு விட்டு பிடித்து கொடுப்பவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்கிறது. வாக்குரிமை சுதந்திரம் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க கூடாது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


மக்கள் கருத்து

ARASAMUTHUApr 7, 2021 - 01:00:45 PM | Posted IP 162.1*****

இந்த ஆளுக்கு கொஞ்சம் வாக்கு பதிவு MACHINE கொடுத்துருங்க. இவர் எண்ணட்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest CakesThalir ProductsThoothukudi Business Directory