» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் அந்நிய நபர்கள் வெளியேற வேண்டும் - எஸ்பி உத்தரவு
சனி 3, ஏப்ரல் 2021 3:15:41 PM (IST)
சட்டமன்ற தேர்தல் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 7 மணியளவில் முடிவடைகிறது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு இல்லாத அந்நிய நபர்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு இல்லாத அந்நிய நபர்கள் யாரும் தேவையில்லாமல் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் தங்கக்கூடாது. வாக்காளர்களுக்கு பணமோ, பரிசுப்பொருளோ எதுவும் கொடுக்கக்கூடாது. வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்கு 200 மீட்டர் சுற்றளவு எல்லைக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் யாரும் தற்காலிக பூத்கள் அமைப்பதோ, கூட்டம் கூடுவதோ, ஓட்டு கேட்பதோ, போன்ற எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. அதே போன்று வாக்காளர்களை வாக்குச் சாவடி மையங்களுக்கு அரசியல் கட்சியினரோ, வேட்பாளர்களோ வாகனங்களில் ஏற்றிச்செல்வது சட்டப்படி குற்றமாகும். மீறினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் சுமார் 700க்கும் மேற்பட்ட துணை இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இது தவிர 2000க்கும் மேற்பட்ட உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவின் போது முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுவரை விருப்பம் தெரிவிக்காத முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமிருந்தால் நாளை (04.04.2021) காலை 09.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாக மைதானத்தில் நேரடியாக ஆஜராகலாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ல் இறைச்சி கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:45:46 PM (IST)

முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:38:38 PM (IST)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:28:04 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் : பேராசிரியை பாத்திமா பாபு
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:22:16 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : ரஜினிகாந்த் பதில்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:08:12 PM (IST)

தூத்துக்குடியில் பயிற்சி மையத்தை மூட மாணவிகள் எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 4:19:56 PM (IST)
