» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு : ஆட்சியர் தகவல்

சனி 3, ஏப்ரல் 2021 8:40:52 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, நேர்மையான முறையில் தேர்தலை நடத்திட வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கிடா வண்ணம் மாவட்டத்தில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நியமனம் செய்யப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், 01.04;.2021 அன்று இரவு 09.00 மணியளவில் தூத்துக்குடி நகரம், கதவு எண்.31, டூவிபுரம் முதல் தெரு என்ற முகவரியில் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், பெருமளவில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாகவும் புகார் வரப்பெற்றதைத் தொடர்ந்து, பறக்கும்படையினர் மற்றும் மத்திய அரசு வருமான வரித்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, வருமானவரித்துறையினர் மேற்படி முகவரியில் உள்ளவீட்டில் முழுசோதனை நடத்தியதன் அடிப்படையில், 

மேற்படி வீட்டில் சென்னையைச் சேர்ந்த தணிகை அரசு த-பெ.ஜெயராம், நடராஜன் த-பெ.துரைப்பாண்டியன், பவுர்சிங் த-பெ.டேவிட் ஜெயமணி, தட்சணாமூர்த்தி த-பெ.ராமலிங்கம் மற்றும் டைட்டஸ் த-பெ.தோணி ஆகிய ஐந்து நபர்கள் தங்கியிருந்ததும், அவர்களிடம் கணக்கில் வராத தொகை ரூ.5,17,000/- இருப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணையில் வேறு விபரங்கள் தெரிவிக்கப்படாததாலும், ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததாலும் மேற்படி தொகை வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு எண்.118/2021 நாள்.02.04.2021 பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக வருமான வரித்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், 26.02.2021 முதல் 01.04.2021 வரை அன்று தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு 178 புகார்கள் வரப்பெற்று அவை அனைத்தும் சம்பந்தப்பட்ட பறக்கும்படைக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் மீறியது தொடர்பாக, 195 குற்றவழக்குகளும், பணம் மற்றும் இதரபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக 5 குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 01.04.2021 அன்று மட்டும் மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 18 புகார்கள் வரப்பெற்று விசாரணை செய்யப்பட்டுள்ளது. 01.04.2021 அன்று தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டது தொடர்பாக 18 குற்றவழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 

தூத்துக்குடிமாவட்டத்தில் நாளது தேதிவரை பறக்கும் படைமற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ரூ1,56,31,301/- ரொக்கமும்,ரூ.5,11,21,000/- மதிப்புள்ள தங்கநகைகளும், ரூ.1,45,210/- மதிப்பிற்கு மது பாட்டில்கள்,ரூ.1,38,650/- மதிப்புடைய கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரூ.2,83,587/- இதர பெர்ருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பணம் மற்றும் இதரபொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதை தடைசெய்வது தொடர்பாக, அனைத்து பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருக்கு தீவிரமாக கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Thalir Products

Black Forest CakesThoothukudi Business Directory