» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் நூலக கட்டிடம் திறப்பு விழா

வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:18:01 PM (IST)தூத்துக்குடி சூசை நகரில் ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்பிக் நகர் அரிமா சங்கத்தின்  நிரந்தர திட்டங்கள் சார்பில் சூசை நகரில் நூலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. நூலகத்தினை ஸ்பிக் மற்றும் க்ரீன்ஸ்டார் நிறுவன முதனமை செயல் அலுவலர் பாலு திறந்து வைத்தார். விழாவில் ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பாக நூலகத்திற்கு மேஜை, புத்தக அலமாரி, நாற்காலிகள், புத்தகங்கள் மற்றும் தினசரி பத்திரிக்கைகள் வழங்கப்பட்டது.

விழாவில் முத்தையாபுரம் காவல் நிலைய துணை ஆய்வாளர் சேட்டன், ஸ்பிக் நகர் அரிமா சங்க தமலவர் ரவிச்சந்திரன், செயலாளர் லட்சுமணன், துணை பொது மேலாளர்  பழனிசாமி, சூசை நகர் தலைவர்  இன்பராஜ், மற்றும் ஊர் கமிட்டி உறுப்பினர் அந்தோணி செல்வம் மற்றும் ஸ்பிக் நிறுவன உயர் அதிகாரிகள், அரிமா சங்க உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory