» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு

வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:33:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டாா்.

அதன்படி, ஓட்டப்பிடாரம் சிப்காட் நிலஎடுப்பு வட்டாட்சியா் எஸ். அமுதா கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியராகவும், திருச்செந்தூா் இஸ்ரோ நிலஎடுப்பு (அலகு-4) வட்டாட்சியா் எஸ். பேச்சிமுத்து கயத்தாறு வருவாய் வட்டாட்சியராகவும், கோவில்பட்டி வட்டாட்சியா் ஆா். மணிகண்டன் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியராகவும், கயத்தாறு சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் எஸ். செல்வக்குமாா் சாத்தான்குளம் வருவாய் வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்செந்தூா் இஸ்ரோ நிலஎடுப்பு (அலகு 2) வட்டாட்சியா் எம். ராஜலட்சுமி ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் எஸ்.கே. முத்து கோவில்பட்டி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும், ஏரல் தனி வட்டாட்சியா் எம். லிங்கராஜ் தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ஓட்டப்பிடாரம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ஆா். எலிசபெத் மேரி ஏரல் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், கயத்தாறு வட்டாட்சியா் ஆா். பாஸ்கரன் விளாத்திக்குளம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும், திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் டி. ராஜீவ் தாகூா் ஜேக்கப் திருச்செந்தூா் இஸ்ரோ நில எடுப்பு (அலகு -1) வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்செந்தூா் இஸ்ரோ நில எடுப்பு (அலகு -1) தனி வட்டாட்சியா் எஸ். முத்துராமலிங்கம் திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், விளாத்திக்குளம் சமூப்க பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் எஸ். ராமசுப்பு கயத்தாறு சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், சாத்தான்குளம் வருவாய் வட்டாட்சியா் எம். லட்சுமி கணேஷ் ஓட்டப்பிடாரம் நிலஎடுப்பு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesNalam PasumaiyagamThalir ProductsThoothukudi Business Directory