» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் மாசி திருவிழாவில் ரத உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:07:45 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவில் இன்று ரத உற்வசம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒன்பது நாளும் கோவிலில் விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 10-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி அளவில் ரத உற்வசம்நடந்தது.
வழக்கமாக மாசித்திருவிழா தேரோட்டத்தின்போது பெரிய தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானையுடனும், பெரிய தேரைவிட சற்று சிறிய தேரில் தெய்வானை அம்பாளும், சிறிய தேரில் விநாயகரும் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருவார்கள். இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2 பெரிய தேர்களையும் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஆகியோர் 3 சிறிய தேர்களில் எழுந்தருளி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு செல்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு இரவில் அபிஷேகம், அலங்காரமாகி, சுவாமி- அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் புகைமூட்டம்: பொதுமக்கள் மறியல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 9:04:02 PM (IST)

தூத்துக்குடி புதிய துறைமுத்தில் 20பேருக்கு கரோனா : நிர்வாக அலுவலகம் மூடல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 8:43:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ல் இறைச்சி கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:45:46 PM (IST)

முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:38:38 PM (IST)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:28:04 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் : பேராசிரியை பாத்திமா பாபு
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:22:16 PM (IST)
