» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 2வது நாளாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்ட்ரைக்: மக்கள் அவதி!

வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:20:47 AM (IST)தூத்துக்குடியில் இன்று 2வது நாளாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட வில்லை. 

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்  என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் டவுண், புறநகர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட டிப்போக்களில் இருந்து 299 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 1382 ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணிபுரிந்துவருகின்றனர். 

இன்று மாவட்ட முழுவதும் உள்ள 7 டிப்போக்களில் இருந்து 116 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தற்காலிக டிரைவர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்புள்ள போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர் கூட்டமைப்பு சங்கத் தலைவர் மரியதாஸ் தலைமயில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஜான் கென்னடி, கருப்பசாமி, ராமசாமி, பெரின் பிரின்ஸ், வேலாயுதம், செல்வராஜ் உட்பட 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலான பேருந்துகள் ஓடாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Black Forest Cakes
Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory