» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது

புதன் 27, ஜனவரி 2021 3:12:06 PM (IST)திருச்செந்தூர் சிட்டி அரிமா சங்கம் சார்பில்  எழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது வழங்கப்பட்டது.

திருச்செந்தூர் சிட்டி அரிமா சங்கம் சார்பில் மாவட்ட ஆளுனர் வருகை விழா கீழரத வீதி பண்ணையார் சமுதாய பொதுமடத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் மெய்கண்ட முத்து தலைமை வகித்தார். செயலாளர் அமல்ராஜ் அறிமுகபடுத்தினார். மாவட்ட ஆளுனர் அரிமா ஜெஸ்டின் பால் சிறப்புரை ஆற்றி விருதுகள் வழங்கினார்.  சிறந்த எழுத்தாளராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றார். 

மேலப்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வசனமலர் அன்னபாக்கியம், திருச்சி லாரி ஓட்டுநர் செல்லம்மாள், திருச்சி விளையாட்டு வீரர் மகாகுரு விக்டர் குழந்தைராஜ், விருதுநகர் மாவட்ட வெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிராஜா, காவலர் முத்துராஜன், புகைப்பட கலைஞர் சங்கர், பத்திரிக்கை நிருபர் பிரஷன் குமார், நாட்டுப்புற கலைஞர் ஆரோக்கியம், சமூக சேவை அரிமா கண்ணன், சமூக ஆர்வலர் கோவை ஞானசேகரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிலுவை பிச்சை, மாவட்ட அமைச்சரவை செயலர் மோகன்தாஸ், வெற்றிச் செல்வன், துணை செயல் பால் செல்லப்பா, மாவட்ட கவுன்சிலர் தர்மசீலன், அம்பர் போர்ட் மண்டலத் தலைவர், பிரான்சிஸ் ரவி, மூத்த தலைவர்கள் கணேஷ்பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட தலைவர் ராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலதிருச்செந்தூர் ஸ்ரீகாஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் திறமைகளைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

பொருளாளர் யோகன் கற்றார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கான்சியூஸ், இராசரத்தினம், மனோகர் ராஜன், தேவராஜ் ஜேம்ஸ், ஜெகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.விழாவில் ஆறுமுகநேரி, தூத்துக்குடி சென்டரல், கோவில்பட்டி டைனமிக், பாளையங்கோட்டை கோல்டு, பாளையங்கோட்டை ஸ்டார் ஆரல்வாய் மொழி ஆகிய அரிமா சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


Thalir Products

Thoothukudi Business Directory