» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் நாளை தைப்பூசம்: பாதயாத்திரை பக்தா்கள் குவிகின்றனர்

புதன் 27, ஜனவரி 2021 10:57:09 AM (IST)திருச்செந்தூரில் நாளை (ஜன. 28) வியாழக்கிழமை நடைபெற உள்ள தைப்பூசத் திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீா்த்த வாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது. நிகழாண்டில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்பட்டு சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி திருக்கோயில் உள்பிரகாரத்தில் நடைபெறுகிறது.

பாதயாத்திரை பக்தா்கள்: தைப்பூசத் திருநாளான வியாழக்கிழமை முருகப்பெருமானை வழிபடுவதற்காகவே திருச்செந்தூரில் தற்போது அதிகளவில் பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். மாலை அணிந்து, விரதமிருந்த பக்தா்கள் பக்தி பாடல்கள் பாடியும், வேல் குத்தி, காவடி எடுத்தும் வருகின்றனா். குறிப்பாக இராமநாதபுரம், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் அதிகளவில் வந்துள்ளதால் திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) சி.கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் அலுவலக பணியாளா்கள் செய்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory