» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர் - பைக் பேரணி : கோவில்பட்டியில் பரபரப்பு

புதன் 27, ஜனவரி 2021 8:12:42 AM (IST)டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கோவில்பட்டியில் டிராக்டருடன் இருசக்கர வாகன பேரணி நடந்தது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குடியரசு தினமான நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட போராட்டக்குழு சார்பில் கோவில்பட்டியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். மேலும், விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இதில், ஒரு டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த அனுமதி வழங்கினர். நேற்று மாலை 5 மணிக்கு கோவில்பட்டி காந்தி மைதானத்தில் இருந்து ஒரு டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. பேரணி தொடக்கமாக, மின்சார திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். வேளாண் விளை பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும். 2016-ம் ஆண்டு முதல் பயிர் காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும். 2019-2020-ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீடு உடனே வழங்க வேண்டும். நடப்பு பருவத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோஷங்கள் முழங்கினர்.

தொடர்ந்து காந்தி மைதானத்தில் இருந்து மாவட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் எஸ்.நல்லையா தலைமையில் தொடங்கிய பேரணி கதிரேசன் கோவில் ரோடு, ஏ.கே.எஸ். தியேட்டர் ரோடு வழியாக பயணியர் விடுதி முன்பு முடிவடைந்தது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட தலைவர் பி.மணி, துணைசெயலாளர்சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் க.தமிழரசன், தொ.மு.ச.வை சேர்ந்த கே.ஜி.மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணியை முன்னிட்டு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர்கள் சுதேசன், அய்யப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து

kumarJan 27, 2021 - 01:34:14 PM | Posted IP 173.2*****

en thai thiru nattin thesiya kodiyai irakki pirivinai vatha kodiyai sengkotayil etriya ivargal vivasayigala? thesa throgigal....ivargalai irumbu karm kondu arasu adakkavendum..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamThalir Products

Black Forest Cakes
Thoothukudi Business Directory