» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து முகாம் : எஸ்பி துவக்கி வைத்தார்

வெள்ளி 22, ஜனவரி 2021 11:43:04 AM (IST)தூத்துக்குடியில் சாலை விதிகளை மதித்து நடப்போம் என உறுதிமொழியேற்று கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி நகர காவல்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுபவர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் "எனது வாழ்நாள் முழுவதும் சாலை விதிகளை மதித்தும், எனக்கோ என்னால் பிறருக்கோ, விபத்து ஏற்படுத்தாதவாறு வாகனம் ஓட்டுவேன் என்றும், இனிவரும் சந்ததிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும் உறுதிமொழியேற்று வாகன ஓட்டிகள் கையெழுத்திடும் நூதன சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உறுதிமொழியேற்று முதல் கையொப்பமிட்டு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஷன் மாசிலாமணி, குமார், திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், பென்சன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Thalir ProductsThoothukudi Business Directory