» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வல்லநாடு அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு

வெள்ளி 22, ஜனவரி 2021 11:36:58 AM (IST)

வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள நாணல்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகிய பூ (84). இவர் கடந்த 20ம் தேதி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனிடையே உறவினர்கள் தேடி வந்த நிலையில் இன்று காலை அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து முறப்பநாடு போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir ProductsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory