» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே சிறையில் கைதி தற்கொலை முயற்சி

வெள்ளி 22, ஜனவரி 2021 9:10:45 AM (IST)

தூத்துக்குடி அருகே பேரூரணி சிறையில் கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகன் கணேஷ் பாண்டியன் என்ற கணேஷ் (23). இவர் கொலை மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சங்கரலிங்கபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 27.12.20 முதல் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் நேற்று காலையில் கழிவறைக்கு சென்றார். 

அப்போது, அந்த பகுதியில் சுவரில் இருந்த டியூப்லைட்டை உடைத்து தனக்கு தானே கழுத்தில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கணேஷ்பாண்டியனை உடனடியாக சிறை காவலர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest CakesThalir Products
Thoothukudi Business Directory