» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் ரூ.2½ கோடி உண்டியல் காணிக்கை
வெள்ளி 22, ஜனவரி 2021 8:57:29 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜனவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.2½ கோடி கோடி கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதம் பொதுமக்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடந்தது.கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி தலைமையில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் செல்வராஜ், ரோஜாலி, ஆய்வாளர்கள் முருகன், நம்பி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினர்.
இதில், நிரந்தர உண்டியலில் ரூ.2 கோடியே 34 லட்சத்து 92 ஆயிரத்து 378-ம், கோசாலை உண்டியலில் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 415-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.29 ஆயிரத்து 282-ம், அன்னதான உண்டியலில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்து 835-ம், சிவன் கோவில் அன்னதான உண்டியலில் ரூ.8 ஆயிரத்து 726-ம், நாசரேத் அன்னதான உண்டியலில் ரூ.1,185-ம், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் ரூ.4 ஆயிரத்து 564-ம், குலசேகரன்பட்டினம் அன்னதான உண்டியலில் ரூ.3 ஆயிரத்து 226-ம் காணிக்கையாக கிடைத்துள்ளது. மொத்தத்தில் உண்டியலில் மட்டும் ரூ.2 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 611-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதுதவிர 1,129 கிராம் தங்கமும், 21 கிலோ 246 கிராம் வெள்ளியும், 37 வெளிநாட்டு நோட்டுகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் நூலக கட்டிடம் திறப்பு விழா
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:18:01 PM (IST)

தாசில்தார்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:33:24 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் கொலை: 2 ரவுடிகள் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:14:09 PM (IST)

திருச்செந்தூர் மாசி திருவிழாவில் ரத உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:07:45 PM (IST)

ஏழை மாணவியின் உயிர்காக்க இளைஞர்கள் நிதி சேகரிப்பு!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:51:05 AM (IST)

தூத்துக்குடியில் நடிகர் ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் : துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் உறுதி
வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:37:42 AM (IST)
