» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பரதவர் பாண்டியன் 212 ஆவது நினைவு தினம்

வெள்ளி 22, ஜனவரி 2021 8:51:26 AM (IST)தூத்துக்குடியில் முத்துக்குளி துறையை ஆண்ட மன்னன் பரதவர் பாண்டியன் 212 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படம் திறக்கப்பட்டு குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள தீவுகளை ஆட்சி புரிந்த மற்றும் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடிய முத்துக்குளித்துறை மன்னன் தேர்மாறன் என்று அழைக்கப்படும் பரதவர்ம பாண்டியனின் 212 ஆவது நினைவு தினம் இன்று ராவ்பகதூர் குரூஸ் நற்பணி மன்றம் சார்பில் சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது இதையொட்டி தூத்துக்குடி லசால் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேர் மாறன் நினைவிடம் முன்பு அவரது திருவுருவப்படம் திறக்கும் நிகழ்ச்சி க்கு குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்ட் தலைமை தாங்கினார். இதில் பனிமய மாதா கோவில் பங்குத்தந்தை குமாரராஜா சிறப்பு ஜெபம் செய்து தொழிலதிபர் ஜேசையா வில்லவராயர்  திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார் இதைத்தொடர்ந்து
 
பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் இந்தநிகழ்ச்சியில்   மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவரும் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளருமான  எட்வின் பாண்டியன்  மன்ற செயலாளர் சசிகுமார்,  பொருளாளர் இக்னேஷியஸ்  பேராசிரியர் பாத்திமா பாபு முன்னாள்  துணைமேயர் சேவியர்,  பீட்டர் பெர்னாண்டஸ், பரதர் நல சங்க பொதுச் செயலாளர் கனகராஜ், நிர்மல், டென்சிங், அலன் பரதர், நெய்தல் அண்டோ, கோல்டன்  பரதர், ஜான்சன், தீபக், விஜயன், வளன், கிஷோர்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.‌


மக்கள் கருத்து

kumarJan 23, 2021 - 01:34:57 PM | Posted IP 162.1*****

mannan thermaran miga periya siva bakthar allava?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir ProductsNalam Pasumaiyagam

Black Forest Cakes

Thoothukudi Business Directory