» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வெள்ளி விழா: புதிய கிளையை அமைச்சர் கே.செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

வியாழன் 21, ஜனவரி 2021 4:24:34 PM (IST)தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வெள்ளி விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் புதிய கிளையை அமைச்சர் கே.செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மத்திய கூட்டுறவு வங்கியின் ராஜீவ் நகர் கிளை திறப்பு விழா, மற்றும் 25வது ஆண்டு வெள்ளிவிழா நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் வரவேற்புரையாற்றினர். 

புதிய கிளையை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ குத்துவிளக்கு ஏற்றினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டுறவு துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesThalir ProductsNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory