» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புரெவி புயல் : தூத்துக்குடிக்கு நாளை பொது விடுமுறை

வியாழன் 3, டிசம்பர் 2020 9:36:08 PM (IST)

புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி, குமரி, நெல்லை, தென்காசி, உட்பட 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு : வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல்" இன்று (3.12.2020), மன்னார் வளைகுடா பகுதியில், பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இப்புயல், 4.12.2020 அன்று அதிகாலையில் பாம்பன் - கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது, பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (4.122020) அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும். மேற்கூறிய மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர, பிறபணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory