» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வியாழன் 3, டிசம்பர் 2020 5:46:20 PM (IST)டெல்லியில் பாப்புலர் ப்ரண்ட் அலுவலகம், வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்புவதற்காக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், இது முற்றிலும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல் என மத்திய பாஜக அரசையும், அமலாத் துறையையும் கண்டித்து தூத்துக்குடியில் ஜாமின பள்ளிவாசல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடிமாவட்ட செயலாளர் சம்சு மரைக்காயர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் அப்துல் காதர், மற்றும் நிர்வாகிகள் மௌலவி, டாக்டர். ஆபிருதீன் மன்பா, சம்சுதின் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் தமமுக மாவட்ட செயலாளர் அசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிதர்பிஸ்மி, புரட்சிகர இளைஞர் முன்னணி சுஜித், தமிழக ஜனநாயக கட்சி ஜலால் முகம்மது உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory