» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் : ஆட்சியர் வேண்டுகோள்

வியாழன் 3, டிசம்பர் 2020 5:10:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் இன்று மாலை 6 மணி முதல் வீச உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என  மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் இன்று மாலை வீச உள்ளது எனவும், இந்த சமயத்தில் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் மிக அவசிய தேவையன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும் கன மழையின் காரணமாக நீர் நிலைகளில் அதிக வெள்ளம் செல்ல வாய்ப்புள்ளது எனவே நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். 

புயலின் காரணமாக கடல் கொந்தளிப்பு வாய்ப்புள்ளதால் கடற்கரைக்கு அருகில் செல்ல வேண்டாம். கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், மின்கம்பங்கள்; மின்கம்பிகள், தெருவிளக்குகள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் எனவும், காற்று பலமாக வீசுவதால் மரங்கள் விழ வாய்ப்புள்ளது எனவே பொதுமக்கள் மரங்களுக்கு கீழ் எக்காரணம் கொண்டும் ஒதுங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி மற்றும் கிராமப்புற பகுதியில் அமைக்கபட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களுக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது உடைமைகளை பத்திரப்படுத்திக்கொள்ளுமாறும், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கால்நடைகள் வளர்போர் தங்களது கால்நடைகளை பாதிப்பு ஏற்படாத பகுதிக்கு கொண்டு செல்லுமாறும், மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் டார்ச்லைட், மெழுவத்தி, தீப்பெட்டி போன்றவைகளை இருப்பில் வைத்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இன்று (03.12.2020) மாலை 6 மணி முதல் பொதுமக்கள் மிக முக்கிய காரணம் எதுவுமின்றி வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் எனவும், வாகனங்களில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதிகாரப்பூர்வ மற்றும் நம்பதகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டும் பார்க்குமாறும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் அவசரகால கட்டுபாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 0461 2340101 என்ற தொலைபேசி எண்ணிலும், 9486454714 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புயல் பாதிப்பு தொடர்பான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவித்து உதவுமாறும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ARUMUGA SAMYDec 3, 2020 - 06:08:27 PM | Posted IP 108.1*****

கலெட்சர் சார் நான் தூத்துக்குடிதான் 6 மணியாச்சி இன்னும் மழை வரல....

karthikDec 3, 2020 - 06:06:53 PM | Posted IP 162.1*****

collector sir 6 maniyachi innum malai varala....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory