» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புரவி புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி வரும் ரயில்கள் ரத்து - மதுரை வரை மட்டுமே இயக்கப்படுகிறது

வியாழன் 3, டிசம்பர் 2020 4:15:30 PM (IST)

புரவி புயல் காரணமாக தூத்துக்குடி வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, மதுரை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. 

புரவி புயல் காரணமாக தூத்துக்குடிக்கு வந்து செல்லும் ரயில்கள் மதுரை ரயில் நிலையம் முதல் தூத்துக்குடி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று 03.12.20 இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வரை செல்லும் வண்டி எண் 02693 ஆனது மதுரை வரை மட்டுமே செல்லும். மேலும் இந்த ரயில் வண்டி நாளை 04.12.20 இரவு மதுரை யில் இருந்து புறப்பட்டு வண்டி எண் 02694 ஆக சென்னை செல்லும். இன்று 03.12.20 மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி க்கு புறப்படும் வண்டி எண் 02636 ஆனது மதுரை ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். பின் நாளை 04.12.20 மதுரை இல் இருந்து வண்டி என் 02635 ஆக புறப்பட்டு மைசூர் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes




Anbu Communications





Thoothukudi Business Directory