» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக சட்டசபையில் பா.ஜ.க.,வை அமர வைக்கும் வரை ஓயமாட்டேன் : எல்.முருகன் பேட்டி

செவ்வாய் 1, டிசம்பர் 2020 9:26:09 PM (IST)தமிழக சட்டசபையில் பா.ஜ.க.,வைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளை அமர வைக்கும் வரை ஓயமாட்டேன் என அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் பேசினார்.

தமிழக பா.ஜ.க., சார்பில் கடந்த மாதம் 6ம் தேதி வெற்றிவேல் யாத்திரை திருத்தணியில் துவங்கியது. இந்த யாத்திரை முருகப்பெருமான் அறுபடை வீடுகளுக்கு சென்று, இறுதியாக திருச்செந்தூர் டிச. 7ம் தேதி நிறைவு விழா நடக்கிறது. இதில் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்கிறார். இந்த நிறைவு விழா திருச்செந்தூர் - திருநெல்வேலி ரோட்டில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியை அடுத்த திறந்த வெளி இடத்தில் நடக்கிறது. இந்த இடத்தை தமிழக பா.ஜ.க., தலைவர் முருகன் பார்வையிட்டார். மேலும் கட்சி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் திருச்செந்தூர் சிவமுருகன் கல்யாண மஹாலில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் முருகன் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த மாதம் 6ம் திருத்தணியில் துவங்கிய வேல் யாத்திரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த யாத்திரை விழுப்புரம், கள்ளகுறிச்சி, வேலூர், ராணிபேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது. முன்பெல்லாம் பா.ஜ.க., கட்சி என்றாலே சென்னை, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே உண்டு என்ற நிலை மாறி தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் பா.ஜ.க., வளர்ச்சி அடைந்திருக்கிறது. வேல் யாத்திரைக்கு மாநிலம் முழுவதும் பெண்கள், ரிக்ஷா தொழிலாளிகள், விவசாயிகள், என பொதுமக்கள் அத்தனை பேரும் பேராதரவு தந்திருக்கிறார்கள். தமிழகத்தில் மற்ற கட்சிகளை விட பா.ஜ.க., வேகமாக வளர்ந்து வருகிறது. 

தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வரும் வரை அனைத்து இடங்களில் பொதுமக்களும் கட்சியினரும் வரவேற்பு அளித்தார்கள். திருச்செந்தூரில் யாத்திரை பயணத்தை முடித்ததும் வெற்றிவேலை முருகனுக்கு வழங்குவேன். இந்த யாத்திரை வெற்றி பெறும். இங்கு அத்தனை இருக்கைகளிலும் கட்சியினர் நிறைந்திருப்பதை போல் தமிழக சட்டசபையில் உள்ள இருக்கைகளில் பா.ஜ.க.வினர் அமரும் காலம் விரைவில் வரும்.தமிழ் கடவுள் முருகபெருமானை அவமரியாதை செய்த கறுப்பர் கூட்டத்தை ஓட ஓட காவி கூட்டம் விரட்டிய தீரும். தமிழக சட்டசபையில் பா.ஜ.க., சகோதர, சகோதரிகளை உட்கார வைக்கும் வரை நான் ஓயமாட்டேன். இதை சபதமாக உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

ARASAMUTHUDec 3, 2020 - 01:03:52 PM | Posted IP 108.1*****

NEETHAAN ADUTHTHA MUTHALVAR

TUTYDec 2, 2020 - 12:16:46 PM | Posted IP 108.1*****

vetri vel veeravel

kumarDec 2, 2020 - 11:22:22 AM | Posted IP 162.1*****

valthukkal thiru murugan avargale....ungalathu ennam niraivera valthukkal....

PETCHIMUTHUDec 2, 2020 - 09:44:25 AM | Posted IP 108.1*****

நானும் இதே தூத்துக்குடியில் தான் இருக்கேன். ஆனா நீ சொன்ன மாதிரி உன்னோட வேலு யாத்திரையையும் பாக்கல மக்கள் குடுத்த வரவேற்பையும் பாக்கல. நீங்க ரீல் விட்டே பழகிட்டிங்க நாங்க அதை கேட்டு பழகிட்டோம்.

ராமநாதபூபதிDec 2, 2020 - 09:43:25 AM | Posted IP 108.1*****

ஆமா சட்டசபைல நிகழ்ச்சிகளை பாக்க ஒரு லாபி இருக்கும் அதுல கொண்டு போய் உன்னோட ஆட்களை உக்கார வைக்க வேண்டியது தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory