» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டல் தொழிலாளி மர்ம சாவு : நீதி விசாரணை கோரி உறவினர்கள் மறியல் போராட்டம்

செவ்வாய் 1, டிசம்பர் 2020 9:18:30 PM (IST)

திருச்செந்தூர் அருகே மாயமான ஓட்டல் தொழிலாளி உடல் அழுகிய நிலையில் வாய்க்காலில் மீட்கப்பட்டது. அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோயில் சுடலை பெருமாள் மகன் பொன்சுதன்(21). சைனீஸ் மாஸ்டராக ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 29ம் தேதி மதியம் பொன் சுதன் தனது நண்பர்கள் கார்த்திக் மற்றும் செல்வம் ஆகியோருடன் குளிக்க செல்வதாக கூறி நாலுமூலைகிணறு பத்துகண் மடை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு கார்த்திக், செல்வம் குளித்த போது, பொன்சுதன் சிறிது தள்ளி குளிக்க சென்றராம். சிறிது நேரத்தில் அவரை அவரது நண்பர்கள் ஒருவர் பைக்கில் அழைத்து சென்று வேறு பகுதிக்கு குளிக்க சென்றராம். 

இந்நிலையில் சிறிது நேரத்தில் பொன் சுதன் குளித்த இடத்தில் திடீரென மாயமானார். அவரை கார்த்திக், செல்வம் ஆகியோர் தேடி பார்த்துவிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு மீட்பு படை அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தீயணைப்பு துறையினர் தேடி பார்த்தனர். ஆனால் இரவு வெகு நேரமாகிவிட்டதால் தேடும் பணியை கைவிட்டனர். மறுநாள் காலையில் பத்துகண் மடை பாலத்திலிருந்து மதகு வரை 2 கி.மீ., தேடியும் பொன்சுதன் குறித்து தகவல் கிடைக்க வில்லை. இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் ஆந்தையன் கிணறு வாய்க்கால் பகுதியில் பொன்சுதன் உடல் அழுகிய நிலையில் தீயணைப்பு துறையினர் கண்டெடுத்தனர். 

இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் பொன்சுதன் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரது சாவிற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். வழக்கை ஏ.எஸ்.பி. அளவில் விசாரிக்க வேண்டும். அழுகிய நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள் 75க்கும் மேற்பட்டவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள ரவுண்டானாவில் இன்று மதியம் 2 மணியளவில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 

போராட்டம் நடத்தியவர்களுடன் திருச்செந்தூர் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து 3 மணிநேரத்திற்கு மேலாக மறியல் போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சம்பவம் குறித்து மர்ம சாவு எனவும், சம்பவத்தை ஏ.எஸ்.பி. விசாரிப்பார் என தெரிவித்தார். ஆனாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து செல்லாமல் ரோட்டில் அமர்ந்து இருந்தனர். தொடர்ந்து எஸ்.பி. ஜெயகுமார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் திருச்செந்தூர் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory