» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உழவர்- அலுவலர் தொடர்புத் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 1, டிசம்பர் 2020 5:39:09 PM (IST)
தற்போது வேளாண்துறை அறிமுகப்படுத்தியுள்ள உழவர் அலுவலர்” தொடர்புத் திட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றுப் பயனடைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கிராம பஞ்சாயத்துகளில் நிரந்தர பயணத் திட்டத்தின்படி, 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் விவசாயிகள் மற்றும் உழவர் குழுக்களை சந்தித்து வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் , வேளாண்துறைத் திட்டங்கள் குறித்த தகவலையும் வழங்குகின்றனர்.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் குறைந்த பட்சம் 10 முன்னோடி விவசாயிகளை (இதில் ஆதி திராவிடர், பழங்குடியினர் 2 பேர் உட்பட) தேர்வு செய்து, அவர்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானிய திட்டங்கள் குறித்த விளக்கங்களும், பயிற்சிகளும் உரிய இடைவெளியில் தொடர்ந்து வழங்கப்படும்.
மேலும் இந்த அலுவலர்கள் விவசாயிகளின் வயலில் தொழில் நுட்ப செயல்விளக்கங்கள் நடத்தியும், பயிற்சிகள் அளித்தும், பண்ணைப்பள்ளிகள் மூலமும், கண்டுணர்வு, சுற்றுலாக்கள் மூலமும் நவீன தொழில் நுட்பங்களையும், திட்டங்கள் செயல்பாடுகளையும் விவசாயிகளுக்கு தெரிவிப்பார்கள்.
பயணத்திட்டம்
பயிற்சி பெற்ற விவசாயிகள் வேளாண்மைத்துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவார்கள். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அரசு அலுவலகம், கிராம பொது கட்டிடங்கள், முன்னோடி விவசாயிகளின் இடங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரிடத்தில் ஒரு தொடர்பு மையம் நிர்ணயம் செய்யப்பட்டு அந்த நிரந்திர பயணத்திட்டம் முன்னதாக ஊராட்சிதோறும் தெரிவிக்கப்படும். இருவாரங்களில் தங்கள் பணி எல்கைக்கு உட்பட்ட எல்லா ஊராட்சிகளுக்கும் சென்று வரும் வகையில் இந்த நிரந்தர பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வேளாண் அலுவலர்கள்/துணை வேளாண் அலுவலர்கள் தங்களது உதவி வேளாண் அலுவலர்களின் பணிகளை ஆய்வு செய்வதோடு, அவர்களுக்கு தொழில்நுட்பங்களிலும் , திட்டப்பணிகள் செயல்பாட்டிலும் வழிகாட்டி உதவுவார்கள். இவர்களது முன்பயணத்திட்டம் மாதந்தோறும் தங்கள் பணி எல்கைக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்றுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்செவி அஞ்சல் குழுக்கள்:
மேலும் வேளாண்துறை அலுவலர்கள் முன்னோடி விவசாயிகள் ஆகியோரை உள்ளடக்கிய கட்செவி அஞ்சல் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு,அதன் மூலமும் தொழில்நுட்ப, திட்டப்பணிகள் குறித்த கருத்து பரிமாற்றம் நடைபெறவுள்ளது.
வயல்வெளியை நோக்கி:
வயல்வெளியை நோக்கி வேளாண்துறை அலுவலர்கள் எனும் உன்னத நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் மூலம் தங்களுக்கு தேவையான வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் , வேளாண்துறை செயல்படுத்தும் பல்வேறு மானியத்திட்டங்கள் குறித்து விவரங்களையும் பெற்றுப் பயனடைய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், கேட்டுக்கொள்கிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
புதன் 27, ஜனவரி 2021 5:21:54 PM (IST)

டெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதன் 27, ஜனவரி 2021 5:07:58 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
புதன் 27, ஜனவரி 2021 4:12:51 PM (IST)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்
புதன் 27, ஜனவரி 2021 4:02:18 PM (IST)

ஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு!!
புதன் 27, ஜனவரி 2021 3:22:46 PM (IST)

எழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது
புதன் 27, ஜனவரி 2021 3:12:06 PM (IST)
