» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பரிதாப சாவு

செவ்வாய் 1, டிசம்பர் 2020 4:34:43 PM (IST)

கழுகுமலை அருகே குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மற்றொரு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். 

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளம் கிராமம் சின்ன காலனியைச் சேர்ந்தவர் செல்வபெருமாள். இவரது மகன் சுரேஷ் (10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கரடிகுளத்தில் குளிக்கச் சென்றபோது ஆழமான பகுதிக்கு சென்றதாகத் தெரிகிறது.

இதனால் நீரில் மூழ்கிய சுரேஷை, அவனது நண்பன் கரன் என்ற சிறுவன் காப்பாற்ற முயன்றுள்ளார். இதையடுத்து இருவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனைப் பார்த்த அப்பகுதியினர் 2பேரையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அப்போது நீரில் மூழ்கிய சுரேஷ், உயிரிழந்து விட்டது தெரியவந்து. மேலும் கரன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குக் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றரன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory