» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு

ஞாயிறு 25, அக்டோபர் 2020 8:44:13 PM (IST)தூத்துக்குடியில் ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகம் சார்பில் மாணவர்களுக்கான 15 நாட்கள் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.

தூத்துக்குடியில் பல கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகம் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு கவுன்சிலோடு (SDAT) இணைந்து தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு "Catch Them Young Football Camp " என்ற 15 நாள் கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் நிறைவு விழா தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. முகாம் ஏற்பாடுகளை ஸ்பிரிட்டட் யூத்ஸ் கழகத்தின் செயலாளர் மெரின்டோ வி.ராயன் செய்திருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ், தமிழ்நாடு கால்பந்தாட்டக் கழக தலைவர் ஜேசையா வில்லவராயர், மாவட்ட விளையாட்டு அதிகாரி பேட்ரிக், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஸ்பிரிட்டட் யூத்ஸ் கழகத்தின் தலைவர் பிரின்ஸ்டன் பர்னாந்து தலைமை வகித்தார். ஸ்தாபகர் ஜெயராஜ் ரொட்ரிகோ, மாவட்ட கால்பந்து சங்கச் செயலாளர் ஆல்ட்ரின், கழக பொருளாளர் ஆரோக்கியராஜ், பாலன், மற்றும் நிர்வாகிகள் ஆலிவர் பர்னாந்து. வால்டர் பர்னாந்து, செல்வகுமார், ஜெயபால் பூபால்ராயன், ஜேசுராஜ் பூபால்ராயன், ஜார்ஜ் கென்னடி, கென்னடி பர்னாந்து, ஜெரி, ஜெயபால், செல்வம், லூர்து, ரமேஷ், ரோஷன், பிரஷாந்த், செந்தில், மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory