» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் இயற்கை உணவகம் திறப்பு விழா!

ஞாயிறு 25, அக்டோபர் 2020 9:43:15 AM (IST)குரும்பூர் அருகே நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் இயற்கை உணவகத்தினை சகோதரர் மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்.
                                   
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் இரயில்வே கேட் அருகிலுள்ள நாலுமாவடி தேவனுடையக் கூடார வளாகத்தில் புதுவாழ்வு சபை எதிரில்  இயற்கை உணவகம் திறப்பு விழா நடைபெற்றது. பன்னீர்செல்வம் பாடல் பாடினார்.                 ஆரோக்கியமான வாழ்வுக்கு இயற்கை உணவகத்தினை சகோதரர் மோகன் சி. லாசரஸ் ஜெபித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நாலுமாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழிய பொது மேலாளர் செல்வக் குமார், ஜெபசிங், ஜஸ்டின், சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு, சிவப்பு அரிசி இட்லி, கோதுமை மாவு பூரி, முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை, முருங்கை கீரை தோசை, கருவேப்பிலை தோசை, பொடித் தோசை, வெங்காயம் ஊத்தாப்பம் காலை, மாலை கிடைக்கும். கருப்பட்டி காபி, சுக்கு காபி, கிரீன் டீ, லெமன் டீ, புதினா டீ, வாழைப் பூ வடை, கீரை வடை, மெதுவடை, வாழைப்பூ சில்லி, மதியம் சாமை சாம்பார் சாதம், வரகு ரசம் சாதம், குதிரை வாலி தயிர் சாதம், திணை பாயாசம், வாழைப்பூ பிரியாணி, சிறுதானிய மதிய உணவு வகைகள் போன்ற இயற்கை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. 


மக்கள் கருத்து

kumarOct 27, 2020 - 01:19:58 PM | Posted IP 108.1*****

appo arasiyal vathigalum ivarum ondru endru solla vareengala nanbare?

kumar என்ற கொமாரு அவர்களுக்குOct 26, 2020 - 08:31:41 AM | Posted IP 108.1*****

அரசியல்வாதிகள் கூட்டத்தை போய் பாரு, யாரும் முகக்கவசம் அணியமாட்டார்கள், அங்கு யாரும் இடைவெளி கடைபிடிக்கமாட்டார்கள் .. தேவையில்லாத இடத்தில வந்து குறை கூற வேண்டாம் ..

kumarOct 25, 2020 - 01:32:41 PM | Posted IP 162.1*****

oruthar kooda muga kavasam aniyavillaye....sattam samaniyanuku mattum thana???

சிவா கத்தார்Oct 25, 2020 - 11:30:17 AM | Posted IP 162.1*****

saravanaperumal annanatchi illanu ,ippo ellorum arambitchittanka ,polaikka evvalavo vali irukke .......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory