» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் எஸ்பி ஆய்வு

ஞாயிறு 25, அக்டோபர் 2020 9:22:00 AM (IST)



குலசேகரன்பட்டணம் தசரா திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில், கடற்கரை பகுதியில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த அக்.17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு வாகனத்தில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தது வருகிறது. தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹார நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. கரோனா நோய் பரவலையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதை முன்னிட்டு கடற்கரை பகுதியில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes



Anbu Communications






Thoothukudi Business Directory