» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 5:51:41 PM (IST)கோவில்பட்டியில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக கோவில்பட்டி நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சண்முகராஜ் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயாவிடம் அளித்த கோரிக்கை மனு: கரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் இயங்கவில்லை. எப்போது பள்ளி திறக்க வேண்டும் என்ற அரசு உத்தரவும் இல்லை. ஆனால் தனியார் பள்ளிகளில் இருந்து நோட்டு, புத்தகம் வாங்கி செல்லுங்கள் என்று செல்போன் மூலமாக பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுக்கின்றனர்.‌ அங்கு சென்று பார்த்தால் கல்விக் கட்டணம் செலுத்திவிட்டு நோட்டு புத்தகங்கள் வாங்கிச் செல்லுமாறு கூறுகின்றனர்.

பள்ளி திறப்பு தேதி அறிவிக்காத நிலையில் கரோனோவினால் மக்கள் கஷ்டப்படுகிற சூழலில் தனியார் பள்ளிகள் பெற்றோர்கள் மீது கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் நோட்டு புத்தகம் கொஞ்சமாகத்தான் வந்துள்ளது ஆகையால் தாங்கள் உடனே பள்ளி கட்டணத்தை கட்டி ரசீது வாங்கி, அதன் பின்னர் நோட்டு புத்தகத்திற்கு பணம் கட்டுங்கள் என்று கூறுகின்றனர். ஆகையால் கோவில்பட்டி உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் வரும் 13ஆம் தேதி அன்று மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஊரக பகுதிகளில் நாளை மின்தடை

ஞாயிறு 27, செப்டம்பர் 2020 6:17:43 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory