» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் ஆதாரத்தில் கழிவு நீர் கலப்பு: நாம் தமிழர் கட்சி முற்றுகை!!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 5:42:50 PM (IST)மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இனாம் மணியாச்சி கரிசல்குளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி ஊராட்சியில் கரிசல் குளம் கண்மாயில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொது மக்களுக்கு குடிநீராகவும், பயன்பாட்டு நீராகவும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போதைய ஊராட்சி நிர்வாகம் ஒரு பகுதியிலிருந்து வரும் கழிவு நீரை, வாறுகால் அமைத்து கரிசல் குளம் கண்மாயில் கலக்க விடும் ஊராட்சி நிர்வாகம் முனைப்போடு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனை கண்டித்தும்,‌ கரிசல்குளம் கண்மாயை பாதுகாக்க வலியுறுத்தியும், வில்லிசேரி ஆரம்ப சுகாதார அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதில் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் மருதம் மாரியப்பன்,‌ வழக்கறிஞர் பாசறை பிரிவு மாவட்ட செயலாளர் ரவிக்குமார், சட்டமன்ற தொகுதி செயலாளர் ராசேசு கண்ணா,‌ துணை செயலாளர் செண்பகராஜ், நகர பொருளாளர் ராஜசிம்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஆமாAug 5, 2020 - 07:50:02 AM | Posted IP 108.1*****

திருட்டு திராவிட ஆட்சியில் தான் தூத்துக்குடியில் ஒவ்வொரு தெருவிலும் சாக்கடைகள் நிறைந்து வருகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஊரக பகுதிகளில் நாளை மின்தடை

ஞாயிறு 27, செப்டம்பர் 2020 6:17:43 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory