» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி முழுவதும் 120 இடங்களில் காவல் சோதனை : எஸ்.பி. ஜெயக்குமார் பேட்டி!

ஞாயிறு 12, ஜூலை 2020 11:32:43 AM (IST)தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட‌ எஸ்.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டும் சென்று வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் காவல்துறையினர் சோதனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி நகரத்தில் மட்டும் 35 இடங்களில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பணிகள் செல்வதைத் தவிர்த்து மற்றவர்களின் வாகனங்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் வெளியில் வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் சோதனை பணிகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அத்தியாவசியப் பணிகளை தவிர்த்து வரக்கூடிய மற்ற வாகனங்கள் வழக்குப்பதிவு செய்யப்படும். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் காவல்துறையினர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மாநகர காவல்துறை சட்ட ஒழுங்கு டி.எஸ்.பி  கணேஷ்,  வடபாகம் காவல் ஆய்வாளர் அருள், போக்குவரத்து காவல் துனை ஆய்வாளர் வெங்கடேஷ்  மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory