» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்கேட்டு தராததால் கோஷ்டி மோதல் :5 பெண் உள்பட 17பேர் மீது வழக்கு
ஞாயிறு 12, ஜூலை 2020 11:12:40 AM (IST)
பெண்கேட்டு தராததால் இருத்தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் 5பெண் உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள வாழையடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பாபு மனைவி லட்சுமி (49), இவரது மகன் பார்த்திபனும், அதே ஊர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் அனு என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அனுவுக்கு அரசு செவிலியர் வேலை கிடைத்தையடுத்து அவர் சாயல்குடி மருத்துவமனைக்கு பணி சென்று விட்டாராம்.
இந்நிலையில் லட்சுமி தரப்பினர் நேற்று ஆறுமுகம் வீட்டுக்கு சென்று பெண் கேட்டனர். அதற்கு ஆறுமுகம் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் இருத்தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருத்தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதையடுத்து நாசரேத் காவல் நிலையத்தில் லட்சுமி, ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து (23) ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் நாசரேத் எஸ்.ஐ தங்கேஸ்வரன் விசாரணை நடத்தி லட்சுமி அளித்த புகாரின் பேரில் முத்துக்குமார், ஆறுமுகம், பாப்பா, பேச்சிமுத்து, மாலதி, சங்கர், மாரியம்மாள், முத்து ஆகியோர் மீதும், பேச்சிமுத்து அளித்துள்ள புகாரின்பேரில் பார்த்திபன், பாபு, லட்சுமி, முருகன், முத்துலட்சுமி, அர்ஜூனன், முத்துக்குமார், இசக்கியப்பன், சுப்புசெல்வன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து வலை வீசி தேடி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
புதன் 27, ஜனவரி 2021 5:21:54 PM (IST)

டெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதன் 27, ஜனவரி 2021 5:07:58 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
புதன் 27, ஜனவரி 2021 4:12:51 PM (IST)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்
புதன் 27, ஜனவரி 2021 4:02:18 PM (IST)

ஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு!!
புதன் 27, ஜனவரி 2021 3:22:46 PM (IST)

எழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது
புதன் 27, ஜனவரி 2021 3:12:06 PM (IST)
