» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா தொற்று : முழு ஊரடங்கை அமல்படுத்த வணிகர் சங்கம் கோரிக்கை
ஞாயிறு 12, ஜூலை 2020 10:02:41 AM (IST)
"தூத்துக்குடி மாநகராட்சியில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்" என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் தினமும் பாதிப்பு அதிகரித்து வந்தது. நேற்று மட்டும் 175 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடியில் பிரையண்ட் நகர், அமுதாநகர், டூவிபுரம், கிருஷ்ணராஜபுரம் உள்பட மாநகராட்சி பகுதியில் மட்டும் 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரேனாவால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 124-ஆக அதிகரித்து உள்ளது. இதனால் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் வெற்றிராஜன் அனுப்பியுள்ள மனு: கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் காலத்தில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக பணியாற்றி வருகிறது. தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களையும், அனைத்து சமுதாய பணியளர்களையும் காக்கும் பொருட்டு மீண்டும் மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்பத்தில் கரோனா தொற்று மிகவும் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோர் மூலம் கரோனா தொற்று படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இது கடந்த ஒரு வாரமாக உச்சத்தை எட்டியுள்ளது. தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 200-ஐ நெருங்கி வருகிறது. மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்கடங்காமல் செல்வதால் மதுரையைப் போன்று தூத்துக்குடியிலும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மக்கள் கருத்து
TamilanJul 14, 2020 - 11:44:39 AM | Posted IP 162.1*****
ALL SHOPS CLOSING CUT OF TIME 3.00 PM IS POSSIBLE FOR CORANA SPRED ISSUE
சாமான்யன்Jul 12, 2020 - 08:38:47 PM | Posted IP 108.1*****
சம்பாதித்து முடிச்சாச்சு? கொரோனாவை பரப்பியாச்சு?அடுத்தாப்ல ஊருக்கு உபதேசம்????
KalairajanJul 12, 2020 - 05:25:29 PM | Posted IP 162.1*****
வியாபாரிகள் யாரும் மாஸ்க் அணிவதில்லை கஸ்டமர்களையும் அணியசொல்வதில்லை
K KalimuthuJul 12, 2020 - 12:38:57 PM | Posted IP 173.2*****
I appreciate the locksown
மேலும் தொடரும் செய்திகள்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
புதன் 27, ஜனவரி 2021 5:21:54 PM (IST)

டெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதன் 27, ஜனவரி 2021 5:07:58 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
புதன் 27, ஜனவரி 2021 4:12:51 PM (IST)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்
புதன் 27, ஜனவரி 2021 4:02:18 PM (IST)

ஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு!!
புதன் 27, ஜனவரி 2021 3:22:46 PM (IST)

எழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது
புதன் 27, ஜனவரி 2021 3:12:06 PM (IST)

DJJNSJul 14, 2020 - 03:30:27 PM | Posted IP 162.1*****