» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை - மகன் கொலை வழக்கு ஆவணங்கள் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!!

வெள்ளி 10, ஜூலை 2020 12:08:18 PM (IST)

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு ஆவணங்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்து மதுரை நீதிமன்றத்திற்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்ததாக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். 

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 பேரை கைது செய்தனர். ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை செய்தது. அதன்பேரில் புதுடெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 7-ம் தேதி மாலையில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் பதிவு செய்த 176(1-ஏ)(1) பிரிவில் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 

மேலும் சாத்தான்குளம் காவல்  நிலையத்தில் கடந்த 19.6.2020 முதல் 22.6.2020 வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், கொலை செய்தல், தடயங்களை அழித்தல் போன்ற சந்தேகப்படும்படியான குற்றங்கள் நடந்து இருக்கலாம் என்றும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக புதுடெல்லி சி.பி.ஐ. ஏ.டி.எஸ்.பி., விஜய்குமார் சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தலைமையிலான குழுவினர் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து உள்ளனர். 

இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வருகின்றனர். அங்கு இந்த வழக்கு விசாரணை அதிகாரியான டிஎஸ்பி அனில்குமார், வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளார். அதன்பிறகு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் கொலை வழக்கு ஆவணங்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்து மதுரை நீதிமன்றத்திற்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி அமர்வு நீதிமன்றத்தில் இருந்து மதுரை நீதிமன்றத்திற்கு சாத்தான்குளம் வழக்கு மாற்றப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

M.sundaramJul 10, 2020 - 05:16:01 PM | Posted IP 173.2*****

Now CBI wants all the documents either in Hindi or English. Translation of all documents takes some more time. CBI starts their inquiry from the beginning. The delivery of justice will be delayed which means the justice is denied. All the accused will get their promotion in due course with out any hindrance.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory