» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கீழே கிடந்த பர்சை போலீசிடம் ஒப்படைத்த முதியவர் : மாவட்ட எஸ்.பி., பாராட்டு

வெள்ளி 10, ஜூலை 2020 12:02:02 PM (IST)தூத்துக்குடியில் பணத்துடன் கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து காவல் நிலையம் மூலம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நபரின் நேர்மையான செயலை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் பாராட்டினார்.

தூத்துக்குடி ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த பாத்திமா பீவி என்பவர் ஜாகிர் ஹுசைன் நகருக்கு வந்து கொண்டிருக்கும் போது தான் வைத்திருந்த மணி பர்ஸை தவறவிட்டுள்ளார் அதில் ரூ 12,500  பணம் இருந்துள்ளது. இந்த மணி பர்ஸை அப்பகுதியில் வந்து கொண்டிருந்த கனகராஜ் என்பவர் எடுத்து தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

இதனையடுத்து தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் மகாராஜன் முன்னிலையில் கனகராஜ் மூலமாக பாத்திமா பீவி என்பவரிடம் ரூபாய் 12,500 பணம் ஒப்படைக்கப்பட்டது.பணத்தை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்க உதவிய கனகராஜை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Jul 11, 2020 - 10:15:10 PM | Posted IP 162.1*****

Very good kanagaraj sir. God bless you. Greetings

IngridJul 11, 2020 - 07:57:30 AM | Posted IP 162.1*****

Superb it's a good action Hat's off to the gentleman

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory