» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொறியியல் கல்லூரி மாணவி காதலனுடன் மாயம்? போலீஸ் விசாரணை
வெள்ளி 10, ஜூலை 2020 11:57:19 AM (IST)
கயத்தாறு அருகே பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகேயுள்ள மானங்காத்தான் கிராமம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் ஜெயா (20), நெல்லையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி வீட்டை விட்டு சென்ற ஜெயா, அதன் பின்னர் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கயத்தார் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இதில், மானங்காத்தான் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அனித் (30), என்பவரும் கல்லூரி மாணவி ஜெயாவும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தற்போது இருவரும் ஊரைவிட்டுச் சென்றிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் மாயமான காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகுகள் திடீர் வேலைநிறுத்தம்
வெள்ளி 22, ஜனவரி 2021 11:20:40 AM (IST)

தூத்துக்குடி அருகே சிறையில் கைதி தற்கொலை முயற்சி
வெள்ளி 22, ஜனவரி 2021 9:10:45 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ரூ.2½ கோடி உண்டியல் காணிக்கை
வெள்ளி 22, ஜனவரி 2021 8:57:29 AM (IST)

பரதவர் பாண்டியன் 212 ஆவது நினைவு தினம்
வெள்ளி 22, ஜனவரி 2021 8:51:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதங்களை வேளாண் இயக்குனர் ஆய்வு
வெள்ளி 22, ஜனவரி 2021 8:39:31 AM (IST)

அகல இரயில்பாதை நிலஎடுப்பு தொடர்பாக 29ம் தேதி பொது விசாரணை : ஆட்சியர் தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 4:49:11 PM (IST)
