» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை, மகன் மரணம் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு: விரைவில் சாத்தான்குளம் வருகை!!

புதன் 8, ஜூலை 2020 4:42:53 PM (IST)

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து வழக்கு விவரங்களை சி.பி.சி.ஐ.டி. ஒப்படைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, இதுவரை 10 பேரை கைது செய்தது.

இந்த வழக்கை சிபிஐ ஏற்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டது. இதையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து, வழக்கு விவரங்களை சி.பி.சி.ஐ.டி. ஒப்படைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே இவ்வழக்கின் 70 சதவீத விசாரணையை சிபிசிஐடி முடித்து விட்டதாகவும், சாட்சிகள், போலீசார் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு விட்டதாகவும், அது தொடர்பான ஆவணைங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. குழு விரைவில் சாத்தான்குளம் வரவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory