» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணியின் போது தவறி விழுந்த எலக்ட்ரீசியன் பரிதாப சாவு

புதன் 8, ஜூலை 2020 3:40:07 PM (IST)

செய்துங்கநல்லூர் அருகே பணியின் போது தவறி விழுந்து படுகாயம் அடைந்த எலக்ட்ரீசியன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே கொள்ளீர் குளத்தினை சேர்ந்தவர் பிச்சைகண்ணு மகன் மைக்கேல் ராஜ் (45). எலக்ட்ரீசியனான இவர், வயரிங் ஒப்பந்த பணிகளை செய்து வந்தார். இவரது மனைவி பேச்சியம்மாள் முத்தாலங்குறிச்சி செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியருக்கு மதன், பிரியதர்சினி என 2 குழந்தைகளும் உள்ளனர். 

இந்நிலையில், மைக்கேல் ராஜ் கடந்த 6ம் தேதி முத்தாலங்குறிச்சி காமராஜர் தெருவில் சேர்மதுரை என்பவர் வீட்டில் வயரிங் பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கருங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்று நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ரோஸ்லின் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory