» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒரே நாளில் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி : தூத்துக்குடியில் பொதுமக்கள் அச்சம்
திங்கள் 6, ஜூலை 2020 9:04:40 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதலில் 27 நபர்கள் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதில் ஒருவரை தவிர அனைவரும் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மே மாத தொடக்கத்தில் பச்சை மண்டலமாக தூத்துக்குடி மாறியது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களாலும், மராட்டியம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கரோனா பரவி வந்தது.
இது ஒருபுறமிருக்க தற்போது உள்ளூரிலேயே சமூக இடைவெளியை பின்பற்றாமல் கடைகள், மார்க்கெட்டில் குவியும் நபர்களால் கரோனா வேகமாக பரவி வருகிறது. இன்று மட்டும் மாவட்டம் முழுவதும் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில் திரேஸ்புரம் பகுதியில் மட்டும் சுமார் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது. இதனால் திரேஸ்புரம் பகுதியில் ஆட்சியர் சந்திப்நந்தூரி நேரடி ஆய்வு நடத்தினார். இவ்வாறு பல்வேறு காரணங்களால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமென சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் முழு ஊரடங்கு என்பதை தவிர்த்து தற்போது உள்ள தளர்வுகளில் சில மாற்றங்களை அறிவிக்கலாம் என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். உதாரணமாக கடைகள் திறக்கும் நேரத்தினை குறைப்பது, மேலும் இரவு 9 மணிக்கு மேல் வெளியே செல்ல தடை என்பதை இரவு 7 மணி என மாற்றலாம் என கோரிக்கை வைத்தனர். கரோனா பாதிப்பினை குறைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து மீண்டும் கரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மக்கள் கருத்து
ஜெபசிங்Jul 7, 2020 - 01:45:45 PM | Posted IP 108.1*****
KADAI 6 TO 3 POTHUM
tamilanJul 7, 2020 - 12:24:22 PM | Posted IP 162.1*****
lockdown kandipa potanum yaarume tuty la corona romba spread aaguratha paakura mari therila
K.RAJAJul 7, 2020 - 11:51:13 AM | Posted IP 108.1*****
CLOSING THE PAROTA SHOPMANYMORE PROBLEMSCLEARED
MohanJul 7, 2020 - 11:18:46 AM | Posted IP 108.1*****
கடை திறப்பு நேரம் 6to3
G.RAMESHJul 7, 2020 - 09:41:41 AM | Posted IP 162.1*****
Lock Down is total waste . Social Distance,Clean & Proper Food is very important.
RajeshJul 7, 2020 - 07:29:50 AM | Posted IP 162.1*****
Full lock down podunga save thootukudi
ThoothukudiJul 6, 2020 - 10:54:59 PM | Posted IP 108.1*****
Thayavu panni thoothukudi ku lock podunga 7pm vara ila full lock panunga ,, apo than spread aguratha control pana mutium
கண்ணன்Jul 6, 2020 - 10:39:01 PM | Posted IP 108.1*****
முழு லாக்டவுன் தேவை
KalairajanJul 6, 2020 - 09:14:48 PM | Posted IP 162.1*****
கடை திறப்பு நேரத்தை குறைக்க வேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகுகள் திடீர் வேலைநிறுத்தம்
வெள்ளி 22, ஜனவரி 2021 11:20:40 AM (IST)

தூத்துக்குடி அருகே சிறையில் கைதி தற்கொலை முயற்சி
வெள்ளி 22, ஜனவரி 2021 9:10:45 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ரூ.2½ கோடி உண்டியல் காணிக்கை
வெள்ளி 22, ஜனவரி 2021 8:57:29 AM (IST)

பரதவர் பாண்டியன் 212 ஆவது நினைவு தினம்
வெள்ளி 22, ஜனவரி 2021 8:51:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதங்களை வேளாண் இயக்குனர் ஆய்வு
வெள்ளி 22, ஜனவரி 2021 8:39:31 AM (IST)

அகல இரயில்பாதை நிலஎடுப்பு தொடர்பாக 29ம் தேதி பொது விசாரணை : ஆட்சியர் தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 4:49:11 PM (IST)

MASSJul 7, 2020 - 02:43:57 PM | Posted IP 108.1*****