» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீதிபதியை அவமதித்த போலீசார் மீது நடவடிக்கை : கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

திங்கள் 6, ஜூலை 2020 7:35:01 PM (IST)


சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்து அவமதித்த காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கரோனா பரவல் நேரத்தில் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு செய்யப்பட்டதை கண்டித்தும், சாத்தான்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் வழங்காமல், சிறையில் வைத்தே வழக்கினை நடத்தி தண்டனை வழங்க வேண்டும், சாத்தான்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்திய கோவில்பட்டி ஜெ.எம்.1 நீதிமன்ற நீதிபதி பாரதிதாசனுக்கு மிரட்டல் விடுத்து அவமதித்த சம்பந்தபட்ட காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்புலிகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வீரப்பெருமாள் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி நகர செயலாளர் அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெறாமல் ஊரடங்கு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory