» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 41 பேர் டிஸ்சார்ஜ்

திங்கள் 6, ஜூலை 2020 7:14:26 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டிலிருந்து இன்று 41 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களாலும், மராட்டியம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களாலும் கரோனா பரவி வந்தது. ஆனால் தற்போது சென்னை உள்ளிட்ட வெளி ஊர்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் மூலம்  கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டிலிருந்து இன்று 41 நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி 244 பேர் நோய்த்தொற்றின் காரணமாக உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory