» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை 2 பெண்கள் கைது

திங்கள் 6, ஜூலை 2020 6:31:15 PM (IST)


கருங்குளத்தில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனைசெய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று (5 ம் தேதி) ஞாயிற்று கிழமை நாடு முழுவதும்  முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தது. இந்த வேளையில் மது கடை  அடைக்கப்பட்டிருந்தது. செய்துங்கநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் சிலுவை அந்தோணி தலைமையில், பயிற்சி உதவி ஆய்வாளர் தேவி மற்றும் காவலர் மகராசி ஆகியோர்  செய்துங்கநல்லூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்குளம் சுடலை கோவில் அருகே 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். அவர்களை விசாரித்த போது கருங்குளத்தைச் சேர்ந்த வள்ளி, இசக்கித்தாய் என தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 பதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory