» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பேருந்து போக்குவரத்து நாளை தொடக்கம் : விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை

ஞாயிறு 31, மே 2020 6:27:55 PM (IST)

தூத்துக்குடி நகரில் மீண்டும் நாளை முதல் போக்குவரத்து நடைபெற உள்ள நிலையில் அதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் பயணிகள் விதிமுறைகளை பின்பற்ற போக்குவரத்து துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் 5 ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் நாளை முதல் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசுப்பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடியிலும் 2 மாதங்களுக்கு பிறகு பொது போக்குவரத்துக்கு மீண்டும் தயாராகிறது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, நாளை காலை 6 மணி முதல் தூத்துக்குடியிலிருந்து அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்குகிறது. இதில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களுக்குள் பயணிக்கலாம்.

பிற ஊர்களுக்கு செல்ல இ பாஸ் அவசியம். 50 சதவித பேருந்துகள் 60 சதவித பயணிகளுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பேருந்துகளில் பயணம் செய்வோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.  பழைய பேருந்து கட்டணமே அமலில் இருக்கும் என தெரிவித்தார்.இது ஒரு புறமிருக்க தனியார் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. பேருந்து போக்குவரத்து இயங்க உள்ள நிலையில் தூத்துக்குடியில் தற்காலிக பேருந்துநிலையத்திலும், பேருந்துகளிலும் ஆய்வு செய்யப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory